மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து விதவை பெண்ணை கற்பழித்தவர் கைது
மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து விதவை பெண்ணை கற்பழித்தவர் போலீசில் சிக்கினார். இவர் போலீஸ் டி.ஐ.ஜி.யாக நடித்து பண மோசடி செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
மும்பை,
மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து விதவை பெண்ணை கற்பழித்தவர் போலீசில் சிக்கினார். இவர் போலீஸ் டி.ஐ.ஜி.யாக நடித்து பண மோசடி செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
விதவை பெண்
மும்பை மால்வாணியை சேர்ந்த 40 வயது விதவை பெண் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த புபேந்திரா(வயது55) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்தநிலையில் விதவை பெண் புதிதாக மேலும் ஒரு கடை தொடங்க விரும்பினார். இதனை அறிந்த புபேந்திரா கடை தொடங்க நிதி உதவி செய்வதாக பெண்ணிடம் தெரிவித்தார்.
மேலும் பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். சம்பவத்தன்று புபேந்திரா கோவிலுக்கு செல்வதாக கூறி, அந்த பெண்ணை காரில் அழைத்து சென்றார்.
போலீசில் சிக்கினார்
வழியில் அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து உள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்தில் பெண் மயங்கி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட புபேந்திரா காரில் வைத்து பெண்ணை கற்பழித்து உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட விதவை பெண் சம்பவம் குறித்து மால்வாணி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புபேந்திராவை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், குஜராத்தில் போலீஸ் டி.ஐ.ஜி.யாக நடித்து பலரிடம் பணமோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.