தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 10 பவுன் நகைகள் மீட்பு

பாலக்காடு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்து 10 பவுன் நகையை மீட்டனர்.

Update: 2019-01-27 22:15 GMT
பாலக்காடு,

திருச்சூர் மாவட்டம் பாலக்காடு அருகே உள்ள பால, பைன், கொழவள்ளம் பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதையொட்டி இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நடந்து வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒரு வீட்டில் இருந்த நகையை திருடிக்கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.

இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஈராட்டுபேட்டையை சேர்ந்த ஸியாதி (வயது 35) என்று தெரிந்தது. மேலும் அவர் பல்வேறு இடங்களில் திருடிய நகையை அடகு வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்