திருச்சி அருகே 2-வது நாளாக மாநாட்டில் குவிந்த முஸ்லிம்கள் மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர்
திருச்சி இனாம்குளத் தூரில் 2-வது நாளாக இஜ்திமா மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.
மணப்பாறை,
முஸ்லிம்கள் ஒன்று கூடும் இஜ்திமா என்னும் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் விண்ணப்பித்ததன் அடிப்படையில் மாநாடு நடைபெறும் இடம், தேதி முன்னரே தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி 2019-ம் ஆண்டின் தமிழ்நாடு இஜ்திமா மாநாடு 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இனாம்குளத்தூரில் சாலையையொட்டி உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் சுத்தப்படுத்தப்பட்டு, மாநாட்டு திடலுக்காக தயார் செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வருவார்கள் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டது. தலா 4 மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கு தங்குவதற்கு மேற்கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டது. இஜ்திமாவில் பங்கேற்பவர்களுக்கான தொழுகை வசதி, குடிநீர் வசதி, குளியலறை, கழிவறை, மின்விளக்கு வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் காலை பஜர் தொழுகைக்கு பிறகு, சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இஜ்திமாவின் நோக்கம் என்னவென்றால், “இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைதூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவேண்டும். மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும்“ என்பதனை வலியுறுத்துவதாகும். மேலும், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் பாங்கு, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.
2-வது நாளான நேற்றும் இஜ்திமா மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சாரை, சாரையாக வாகனங்களில் முஸ்லிம்கள் மாநாட்டு திடலுக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். மாநாட்டு திடலில் நேற்று நடைபெற்ற 5 வேளை தொழுகையில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அதன்பிறகு மார்க்கம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக நேற்று மாலை மாநாட்டு திடலிலேயே 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நபிவழி சுன்னத்தை பின்பற்றிடும் வகையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்தவர்கள் மணமகன்களை கட்டித்தழுவியும், மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
3-வது நாளான இன்று(திங்கட்கிழமை) மதியத்துடன் இஜ்திமா மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு துஆ இன்று மதியம் ஓதப்படுகிறது. இந்த துஆவில் கலந்து கொள்வதற்காக மேலும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டு திடலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது. உணவு தயார் செய்யும் பணியும் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். உணவு தயார் செய்வதற்கு தேவையான சமையல் பொருட்கள் வைப்பதற்கு தனியாக இடம் அமைத்து, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொழுகைக்கு முன்னதாக அந்த தண்ணீரில் முகம், கை, கால்களை கழுவி ஒது செய்து கொள்கிறார்கள். மேலும், அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மாநாட்டு திடலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை முறைப்படுத்தி, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கி நிறுத்தி வைக்கப்படுகிறது. வாகனங்களை முறைப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.