திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த முடிவு
திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவதற்கு சுமார் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
திருச்சி,
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. வேலை நிறுத்தத்தில் குதித்து உள்ள ஆசிரியர்கள் தினமும் ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சுமார் 450 பேர் மாநிலம் முழுவதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
ஆனால், எச்சரிக்கையையும் மீறி ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பள்ளிகளை இழுத்து மூடுவோம் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தமிழக அரசு உத்தரவின்படி தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி மாவட்டம் வாரியாக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி மாநகரம், திருச்சி மேற்கு, அந்தநல்லூர், திருவெறும்பூர் கல்வி சரகத்திற்கு உட்பட்டவர்களிடம் நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முன்னதாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் பட்டதாரிகளும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்வதற்காக அங்கு வந்து குவிந்தனர். அவர்களில் பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர். ஆனால், விண்ணப்பம் பெறுவதற்கான இடம் மாற்றப்பட்டு விட்டது என கூறியதால் அனைவரும் வெஸ்ட்ரி பள்ளிக்கு சென்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகாரிகள் தங்களை வேண்டும் என்றே அலைய விடுவதாக குற்றம் சாட்டினார்கள்.
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை வரை தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விருப்பம் தெரிவித்து சுமார் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர் என்றார்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) வழக்கம் போல் செயல்படும். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து வரும் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். பள்ளிகளை மூடுவதற்கு யார் வந்தாலும் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்’ என்றார்.