நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஆய்வு

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியரா நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2019-01-27 21:30 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியரா நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை கோட்ட அதிகாரி ஆய்வு

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்ய மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியரா நேற்று காலை வந்தார். அவர், ரெயில் நிலைய நடைமேடையை ஆய்வு செய்தார்.

பின்னர் நடை மேடைகளின் மேற்கூரை அமைத்தல், மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்கும் பணிகள், வெளி வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய வழித்தடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஓய்வு விடுதி

ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு ஓய்வு விடுதி ரெயில்வே நிலைய பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது. பயணிகள் வசதிகளுக்கான மேம்பாட்டு பணிகள் நெல்லை சந்திப்பு நிலையத்தில் நடந்து வருகிறது. அந்த பணிகளையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் மதுரை- நெல்லை இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தை ஆய்வு பெட்டியில் சென்று சோதனை செய்தார். அவருடன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்