ஜாக்டோ- ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் திருமாவளவன் பேட்டி

ஜாக்டோ- ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் திருமாவளவன் பேட்டி.

Update: 2019-01-27 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜெயங்கொண்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்திய மோடி கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்கு என்ன முயற்சி செய்தார். இந்தியாவில் மாற்றம், வளர்ச்சி என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோடி கூறினார். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் வளர்ந்தனர். ஆனால் இந்த முறை அவருடைய மாயாஜால வார்த்தைகளுக்கு யாரும் மயங்க மாட்டார்கள். மதுரையில் சின்னப்பிள்ளை அம்மாள் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட்ட விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதை கண்டிக்கிறோம். நெய்வேலியில் 34 கிராமங்களை உள்ளடக்கி பொதுமக்களை அப்புறப்படுத்தி புதிய சுரங்கம் ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் பொது மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து இதுவரை அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை. இதற்காக மக்கள் போராடும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஜாக்டோ- ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்