நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது டிராக்டர் பறிமுதல்
நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படி கீழ்வேளூர் இருக்கை கிராமம் அருகே நாகை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டிராக்டர் டிரைவர் புதுச்சேரி விக்கினாபுரத்தை சேர்ந்த சின்னையன் மகன் ராமதாஸ் (வயது 32), தேவூரை சேர்ந்த கண்ணதாசன் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸ், கண்ணதாசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.