ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் போராட்டம்: 18 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 25 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 25 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார், முதன்மை கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நேற்று 18 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவு நகல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பணியிடை நீக்க உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.