திருப்பூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா: 245 பேருக்கு ரூ.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் 245 பேருக்கு ரூ.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நேற்றுகாலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி முன்னிலை வகித்தார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் நடந்த காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர், டிராபிக் வார்டன்கள், சிக்கண்ணா அரசு கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அதன்பிறகு சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்க விட்டனர்.
பின்னர் முதல்-அமைச்சர் பதக்கம் பெற்ற காவல்துறையினருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்ட காவல்துறையில் 28 பேருக்கும், மாநகர காவல்துறையில் 10 பேருக்கும் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார். சிறப்பாக பணியாற்றிய 60 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், காவல்துறையில் மாநகரில் 32 பேர், மாவட்டத்தில் 27 பேர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் உள்பட மொத்தம் 168 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங் கப்பட்டது. இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ சார்பில் மொத்தம் 245 பேருக்கு ரூ.63 லட்சத்து 6 ஆயிரத்து 346 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். காந்தி மற்றும் கொடிகாத்த குமரன் போல் இருவர் வேடமணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, போலீஸ் துணை கமிஷனர் உமா, சப்-கலெக்டர்கள் ஷ்ரவன்குமார் (திருப்பூர்), கிரேஸ் பச்சாவு (தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வளர்மதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறள், துணை கலெக்டர்கள், காவல்துறையினர், அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.