திருச்சி போராட்டத்தில் கைதான 6 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
திருச்சியில் போராட்டத்தில் கைதான 6 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் நடவடிக்கை எடுத்தார்.;
திருச்சி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கடந்த 22–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்து 645 பேர் கைதாகினர்.
கைதானவர்களில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன், நிர்வாகிகள் சக்திவேல், வெங்கட்ராமன், தியாகராஜன், தெனாலீஸ்வரன், ராஜேந்திரன் ஆகிய 6 ஆசிரியர்கள் மீதும் செசன்சு கோர்ட்டு போலீசார் 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைதான 6 ஆசிரியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதில் நீலகண்டன் உள்பட 6 ஆசிரியர்கள் மீதும் பணியிடை நீக்கம் நடவடிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் எடுத்தார்.
அதன்பேரில் 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். திருச்சியில் ஆசிரியர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.