கும்பகோணத்தில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி ஈ.எஸ்.எம்.பி. நகரை சேர்ந்தவர் பைசல் (வயது32). இவர் மேலக்காவிரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இதே வணிக வளாகத்தில் புதுக்காலனியை சேர்ந்த ரபீக் (48) மளிகை கடை நடத்தி வருகிறார். அதேபோல் கே.எம்.சி. நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் பால் கடை நடத்தி வருகிறார்.
இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் தங்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை வணிக வளாகத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரின் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடைகள் திறந்து கிடந்தன. அதே வணிகவளாகத்தில் கே.எம்.சி. நகரை சேர்ந்த ஜெயினுலாப்தீன் (36) என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனமும் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மேலும் கடைகளில் இருந்து செல்போன்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.