பவானிசாகர் அணையில் இருந்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பவானிசாகர் அணையில் இருந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார்.
பகல் 11 மணிக்கு விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
சுதந்திரராசு: கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டது. மதுபானம் கொடுத்தால் கோமாரி நோய் குணமாகுமா? என்பதற்கு கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறு, குறு விவசாயிகளின் நிலத்தை எந்த ஒரு திட்டத்துக்காகவும் அரசு எடுக்கக்கூடாது. மொடக்குறிச்சியில் உள்ள வேளாண்மைத்துறை கட்டிடமும் அங்குள்ள குடோனும் பழுதடைந்து உள்ளது. அதனால் குடோனில் இருப்பு வைக்கப்படும் விதைகள் சேதமடைகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லசாமி: ஈரோடு மாநகர மக்களுக்கு, ஊராட்சி கோட்டையில் இருந்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பிற பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
அறச்சலூர் பகுதியில் வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் நீரா விற்பனை செய்யவேண்டும்.
சி.எம்.துளசிமணி: காஞ்சிக்கோவில் உட்பட பல நெல் கொள்முதல் நிலையங்களில், சாக்கு இல்லை, பணம் இல்லை என கூறி நெல்லை கொள்முதல் செய்ய தாமதம் செய்கின்றனர். விளை நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணியில், விவசாயிகளை போலீசார் மோசமாக நடத்துகின்றனர். விளை நிலத்தை இழப்பவர்களின் ஆதங்கத்தை புரிந்து, போலீசாரும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.
சென்னியப்பன்: சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கி 58 நாட்கள் ஆகியும் பணம் தரவில்லை. எனவே 15 நாட்களுக்குள் பணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேசும்போது, ‘தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. ஆனால் போதுமான நெல் அறுவடை எந்திரங்கள் கிடைப்பதில்லை. இதனால் வயல்களில் நெல் உதிர்ந்து வீணாகும் நிலை உருவாகி உள்ளது. எனவே போதுமான அளவு நெல் அறுவடை எந்திரங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.30 வரை வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஈரோட்டுக்கு கீழே உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே பவானிசாகர் அணையில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.
இதற்கு கலெக்டர் சி.கதிரவன் பதிலளித்து பேசும்போது, ‘சர்க்கரை விற்கும் வரை பணம் தர முடியாது என்றால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்களுக்கு, 15 நாட்களுக்குள் பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த, வேளாண் துறையினர் ஆய்வு செய்வார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
மாவட்டம் முழுவதும் 38 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதில் தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப்பகுதிக்கு உள்பட்ட கள்ளிப்பட்டி, நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியம்பாளையம், கரட்டடிபாளையம், மேவாணி, டி.என்.பாளையம், ஏளூர், அத்தாணி ஆகிய 8 கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.
மேலும் கீழ்பவானி பாசனத்தில் புதிதாக அஞ்சூர், கணபதிபாளையம், கொடுமுடி, எழுமாத்தூர், சிவகிரி, காஞ்சிக்கோவில், அறச்சலூர், பெரியபுலியூர், வாய்க்கால்புதூர் ஆகிய இடங்களில் 9 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்து 222 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது’ என்றார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகளும் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தாமோதரன் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.