தனிப்பட்ட பிரச்சினைகளை விட சரத்பவாருக்கு கொள்கையே முக்கியம் பிரதமர் பேச்சுக்கு, தேசியவாத காங்கிரஸ் பதிலடி
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனிப்பட்ட பிரச்சினைகளை விட சரத்பவாருக்கு கொள்கையே முக்கியம் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மராட்டியத்தை சேர்ந்த பா.ஜனதா கட்சி தொண்டர்களிடம் காணொலி காட்சி மூலம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய தலைவராக இருந்த சரத்பவார், அதன் தலைவராக விரும்பியதால் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நான் கேள்வி பட்டு இருக்கிறேன். ஒரு குடும்பம் தலைமை தாங்கும் கட்சியில் மட்டும் தான் இப்படி நடக்கும். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் காங்கிரசில் இருந்து வெளியேறிய சரத்பவார் உடனே அதே கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார்” என கூறினார்.
மோடியின் பேச்சுக்கு நேற்று தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் பதிலளித்து கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தலைவராக வெளிநாட்டை சேர்ந்த சோனியா காந்தி நியமிக்கப்பட்டதை எதிர்த்து 1999-ம் ஆண்டு சரத்பவார் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதே ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
பின்னர் 1999-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பா.ஜனதா சரத்பவாருக்கு துணை பிரதமர் பதவி வழங்குவதாக தெரிவித்தது. மேலும் மாநிலத்தில் தங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது.
ஆனால் சரத்பவார் காங்கிரசுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சி அமைத்தார். அவரை பொறுத்தவரை தனிப்பட்ட பிரச்சினைகளை விட கொள்கை மிக முக்கியம். கொள்கை என்று வந்துவிட்டால் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்.
இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இதைப்பற்றி பா.ஜனதா கட்சி தற்போது ஏன் கவலை கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.