மரணமடைந்த சிவக்குமார சுவாமிக்காக 6 மாதத்திற்கு முன்பே தயாரான விபூதி கட்டிகள் அவரே கூறியதாக உற்பத்தியாளர் தகவல்
மரணமடைந்த சிவக்குமார சுவாமிக்காக 6 மாதத்திற்கு முன்பே விபூதி கட்டிகள் தயாரானது தெரியவந்துள்ளது. சிவக்குமார சுவாமி கூறியதால் விபூதி கட்டிகளை தயாரித்ததாக விபூதி உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.
துமகூரு,
துமகூருவில் பிரசித்தி பெற்ற சித்தங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர், 111 வயதான சிவக்குமார சுவாமி. இவர் கடந்த ஒரு ஆண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி சிவக்குமார சுவாமி மரணமடைந்தார்.
அவரது உடல் அரசு மரியாதையுடன் மடத்தில் அவர் ஏற்கனவே வடிவமைத்து வைத்திருந்த சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை சுற்றி விபூதி கட்டிகள் சமாதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவக்குமார சுவாமி சமாதியில் வைக்க 6 மாதத்திற்கு முன்பே விபூதி கட்டி தயாரிக்கும் பணி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விபூதி கட்டிகள் தயாரித்து வழங்கிய பாகல்கோட்டை மாவட்டம் முஜகண்டி கிராமத்தை சேர்ந்த வீரய்யா ஹிரேமட் கூறியதாவது:-
சித்தங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு நாங்கள் தான் விபூதி தயாரித்து வழங்கி வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் அவரை மடத்திற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் உடலில் பூசுவதற்காக 2 ஆயிரம் சிறிய விபூதி கட்டியும், 8 ஆயிரம் பெரிய விபூதி கட்டியும் தயாரிக்கும் படி தெரிவித்தார். அதன்படி விபூதி கட்டி தயாரித்து வந்தோம்.
எங்களது குடும்பம் கடந்த 60 ஆண்டுகளாக விபூதி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் எந்தவிதமான கலப்படமும் இல்லாமல் மாட்டு சாணத்தில் இருந்து விபூதி தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். நாங்கள் தயாரித்து வழங்கிய விபூதியை சிவக்குமார சுவாமி தனது உடலில் பூசி வந்தார். இது நாங்கள் செய்த புண்ணியம். அவரது மறைவால் நாங்கள் துயரத்தில் இருக்கிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் விபூதியை காஞ்சி, காசி, உப்பள்ளி மூன்றாயிரம் மடம் உள்பட பல மடங்களுக்கு வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.