நான் விலைபோனதாக வெளியான தகவல் தவறானது உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. சொல்கிறார்

நான் விலை போனதாக வெளியான தகவல் தவறானது என்று உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-24 22:59 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா ஆபரேஷன் தாமரையை தொடங்கியது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 18-ந் தேதி பெங்களூருவில் நடந்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ் உள்பட 4 பேர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக யார் கண்ணிலும் படாமல் இருந்த உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ., நேற்று தனது சிஞ்சோலி தொகுதியில் தென்பட்டார்.

அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “நான் ரூ.50 கோடிக்கு விலைபோய்விட்டதாக சிலர் எனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். இது வெட்கக்கேடானது. நான் விலைபோனதாக வெளியான தகவல் தவறானது. இவ்வாறு என்னை குறை சொன்னவர்களின் வாயில் புழு விழ வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்