8 வழிச்சாலை தொடர்பான போராட்டம்: 10 விவசாயிகள் மீது வழக்கு
8 வழிச்சாலை தொடர்பான போராட்டத்தில் விவசாயிகள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் குப்பனூர், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விசாரணைக்காக மாசிநாயக்கன்பட்டியில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்றனர். அவர்களை சுமார் 100 அடி தூரத்திலேயே அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி விவசாயிகள். அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் விசாரணையை தள்ளி வைக்க முடியாது என்று கூறிவிட்டு காரில் அங்கு இருந்து செல்ல முயன்றார்.
அப்போது காருக்கு வழிவிடாமல் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட மோகனசுந்தரம், ரவி உள்பட விவசாயிகள் 10 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையில் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பது தொடர்பாக சேலம் அக்ரஹாரம் பூலாவரி பகுதியை சேர்ந்த 20 விவசாயிகளை சீலநாயக்கன்பட்டியில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விசாரணையில் நேற்று அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர்.