போலீஸ் ஜீப் மீது அமர்ந்து ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது
போலீஸ் ஜீப் மீது அமர்ந்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்,
பேஸ்புக்கில் விதவிதமான படங்கள், தகவல்களை வெளியிட்டு ‘லைக்‘ பெறுவது ஏராளமானோரின் விருப்பமாக உள்ளது. அதை பிறருக்கு பகிர்ந்து அனுப்புவோரும் (ஷேர்) ஏராளம். அதேபோல் வாட்ஸ்-அப் மூலம் தகவல்கள், படங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு சமூக வளை தளங்களின் வளர்ச்சி பிரமிக்க வைத்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ‘டிக்-டாக்’ என்ற ஆப் தற்போது பிரபலமாகி வருகிறது.
சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவோர் ஏராளம் என்றாலும், அதை தவறாக பயன்படுத்தி சிக்கலில் சிக்கிக்கொள்வோரும் உண்டு. இதேபோல் ஒரு சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை மூலம் ஜீப் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரைவராக ஏட்டு சிவலிங்கம் பணியாற்றி வருகிறார். ஏட்டு சிவலிங்கம் ஜீப்பில் பேட்டரி சார்ஜ் செய்வதற்காக ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பிற்கு சென்றார். அங்கு ஜீப்பை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சிவலிங்கம் டீக்குடிக்க சென்றார்.
அப்போது ஒர்க்ஷாப்பில் வேலைபார்க்கும் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த சபரி (வயது 28), போலீஸ் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் ஜீப்பின் முன்பகுதியில் உள்ள பானட்டில் உட்கார்ந்து கொண்டும் போஸ் கொடுத்துள்ளார். அவருடைய செய்கைகளை நண்பர் சந்தோஷ் (22) என்பவர் அங்கிருந்து செல்போனில் பதிவு செய்தார்.
பின்னர் அந்த படங்களை ‘டிக்-டாக் ஆப்’ மூலம் வெளியிட்டனர். அதில் சபரி போலீஸ் ஜீப்பில் ஏறுவது போலவும், இறங்குவது போலவும் படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், பிறந்தால் இவரை (சபரி) போல் பிறக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியானது.
இதன்பின்னரே ஆத்தூர் போலீசாருக்கு இதுபற்றிய விவரம் தெரியவந்தது. இதுகுறித்து ஜீப் டிரைவர் சிவலிங்கம் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி, சந்தோஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.