ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது

திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-01-24 22:45 GMT
திருவாரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திருவாரூரில் எல்.ஐ.சி. ஊழியர் மற்றும் முகவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகி பூங்குன்றன், பொது காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் கருணாநிதி, எல்.ஐ.சி. முகவர் சங்கத்தின் செயலாளர் ஆர்.கருணாநிதி, எல்.ஐ.சி. ஊழியர் சங்க செயலாளர் செந்தில்குமார், நிர்வாகி நிதிஷ்சண்முகசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்