மாதவரத்தில், தூங்க இடம் பிடிக்கும் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை வாலிபர் கைது
மாதவரத்தில், குடிசையில் தூங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சக தொழிலாளியை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னை கொண்டித்தோப்பு சுந்தரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சுக்கு என்ற கோவிந்தராஜ் (வயது 51). இவர், மாதவரம் ரவுண்டானா அருகே மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி ஆவார்.
இவருடன் சென்னையை அடுத்த மாதவரம் கொல்கட்டா ஷாப் பகுதியைச் சேர்ந்த அன்பு என்ற அன்பழகன் (33), சுரேஷ்(30) ஆகியோர் அங்கு மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தனர்.
வேலை முடிந்தவுடன் 3 பேரும் மாதவரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ஒன்றாக மது அருந்திவிட்டு அங்குள்ள தனியாருக்கு சொந்தமான எடைமேடை அருகே உள்ள குடிசையில் இரவில் படுத்து தூங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வழக்கம்போல் 3 பேரும் மது அருந்திவிட்டு, தூங்குவதற்காக அதே குடிசைக்கு வந்தனர். குடிசையில் தூங்க இடம் பிடிப்பதில் 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த அன்பழகனும், சுரேசும் அங்கிருந்த கல்லை எடுத்து கோவிந்தராஜ் தலையில் போட்டனர். இதில் அவர், தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்த பின்பு இருவரும் அங்கிருந்து தப்பித்து மாதவரம் ஜி.எஸ்.டி. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாதவரம் போலீசார், சந்தேகத்தின்பேரில் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது தூங்க இடம் பிடிக்கும் தகராறில் தலையில் கல்லைப்போட்டு கோவிந்தராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். திடீரென சுரேஷ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அன்பு என்ற அன்பழகனை மட்டும் போலீசார் கைது செய்தனர்.
அதைதொடர்ந்து மாதவரம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான அன்பழகனிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சுரேசை தேடி வருகின்றனர்.