வானவில் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’

சுகாதாரமற்ற நீரால் பல நோய்கள் பரவுகின்றன. சுத்தமான குடிநீர் எது என்று அறியாமலே நமக்கு கிடைப்பதை குடித்து வருகிறோம். மினரல் வாட்டர் என்று கேன்களில் கிடைக்கும் தண்ணீரும் எந்த அளவு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் சொல்ல முடியாது.

Update: 2019-01-23 10:43 GMT
இயற்கையான முறையில் சுத்தமான குடிநீரை பெறுவதற்காகவே ‘லெவி’ என்கிற கருவியை கண்டுபிடித்துள்ளனர். வீடுகளில் தண்ணீரை சுத்திகரிப்பதற்காக சேர்க்கப்படும் குளோரின் தண்ணீரின் தன்மையையும், சுவையையும் மாற்றி விடும்.

பார்ப்பதற்கு ஒரு சாதாரண மூங்கில் பெட்டியை போன்று தோற்றமளிக்கும் இந்த லெவி கருவி தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அடியோடு நீக்குகிறது. இதை உபயோகிப்பதும் மிக சுலபம். ஒரு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி இந்த கருவியின் உள்ளே வைத்து விட்டால் போதும்.

தண்ணீரை சுத்திகரித்ததும் விளக்கு எரிந்து வேலை முடிந்து விட்டதென தெரியப்படுத்தும். ஒரு பாட்டில் தண்ணீரை பதினைந்து நிமிடத்திற்குள் தூய்மையாக்குகிறது. பாட்டிலையும் அதுவே சுத்தம் செய்து விடுகிறது.

சூரிய ஒளியில் இருப்பது போன்று புற ஊதா ( UV ) கதிர்களைக் கொண்டு சுத்தம் செய்வதால் நமது உடலுக்கு எந்த தீமையும் ஏற்படாது. பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பாட்டில்கள் மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

இந்த கருவி இருந்தால் நம்பிக்கையுடன் தண்ணீரை குடிக்கலாம். தண்ணீர் வாங்குவதற்காக அடிக்கடி கடைக்கு அலையும் வேலையும் மிச்சம். வடிகட்டுவதோ, கொதிக்கவைப்பதோ அவசியமற்று போகிறது. உடலுக்கு தேவையான 21 தாதுச் சத்துக்களை அழியாமல் நமக்கு தருகிறது இந்த கருவி. பல தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு தரமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்