வானவில் : குரல் கட்டளைக்கேற்ப வேலை செய்யும் டேங்கோ பிரிண்டர்
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் வீட்டுப் பாடம் செய்து முடிப்பதற்கு அடிக்கடி பிரிண்டர் இருக்கும் கடைகளைத் தேடிச் செல்வது வழக்கமாகி விட்டது.;
சில நேரங்களில் நமது அலுவலகத் தேவைகளுக்கும் பிரதிகள் எடுக்க வேண்டி வரும். மார்க்கெட்டில் பிரிண்டர்கள் பல இருந்தாலும் உலகின் முதல் ஸ்மார்ட் ஹோம் பிரிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர். பேப்பரில் பிரிண்ட் எடுப்பது மட்டுமின்றி தரமான போட்டோக்களையும் இதில் பிரிண்ட் செய்யலாம். நமது வீட்டை அலங்கரிக்க அழகான படங்களையும் இதில் பிரிண்ட் செய்யலாம்.
இதன் சிறப்பம்சம் என்ன என்றால் பிரிண்டரை தொடாமலேயே இதை நாம் உபயோகிக்கலாம். செயலி மூலம் நமது போனிலிருந்து நமக்கு வேண்டிய படத்தை அனுப்பி பிரதி எடுக்கலாம். நாம் வேறு இடத்தில் இருந்தாலும் வீட்டில் இருக்கும் பிரிண்டருக்கு மெசேஜ் அனுப்பி பிரதி எடுக்கச் செய்யலாம்.
நமது குரலின் கட்டுப்பாட்டுக்கு கூட இந்த டேங்கோ பிரிண்டர் வேலை செய்யும். ஸ்கேன் செய்வதும் இதில் சுலபம். இதன் செயலி இங்க் மற்றும் பேப்பர் தீரப் போகும் முன்னர் நமது போனிற்கு தகவல் அனுப்பிவிடும்.
ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் பிரிண்டரின் விலை 150 அமெரிக்க டாலர் ஆகும்.