தற்போதுள்ள இரட்டை இலை சின்னத்தை மக்கள் ஏற்கவில்லை டி.டி.வி.தினகரன் பேச்சு

தற்போதுள்ள இரட்டைஇலை சின்னத்தை மக்கள் ஏற்கவில்லை என நயினார்கோவிலில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

Update: 2019-01-22 23:45 GMT
நயினார்கோவில்,

 அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தார். போகலூர், நயினார்கோவில் பகுதிக்கு வந்த அவருக்கு போகலூர் ஒன்றிய செயலாளர்கள் போகலூர் ராஜாராம் பாண்டியன், நயினார்கோவில் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நயினார்கோவிலில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:- தற்போதுள்ள இரட்டை இலை சின்னத்தை மக்கள் ஏற்கவில்லை. இதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு சான்றாகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களிடம் இருந்த இரட்டை இலை சின்னம் துரோகிகளிடம் சென்றதால் மதிப்பிழந்து உள்ளது. நயினார்கோவில் பகுதியில் தான் முத்தையாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. அது இனிவரும் இடைத்தேர்தலிலும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அவை தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சாமிதுரை, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாகீர், ஒன்றிய பொருளாளர் கோட்டைச்சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் தினேஷ், இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ், மீனவரணி ஒன்றிய செயலாளர் கண்ணதாசன், நயினார்கோவில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சபரி, ரஞ்சித், மாவட்ட மகளிரணி செயலாளர் வித்யா தரணிதரன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் தென்னரசு, மாவட்ட துணை செயலாளர் ராஜசெல்வி குருந்தையா, அவை தலைவர் வீரகணபதி, விவசாய அணி செயலாளர் நவாஸ்கான், ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி, மாணவரணி செயலாளர் கார்த்திக் சேதுபதி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்