திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்- ஆர்ப்பாட்டம்
திருச்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, எஸ்மா, டெஸ்மாவுக்கு அஞ்சமாட்டோம் என்று ஒருங்கிணைப்பாளர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியது.
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று அரசின் அறிவிப்பையும் மீறி, திருச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் தாலுகா அளவில் திருச்சி, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, மணப்பாறை, தொட்டியம் ஆகிய 8 இடங்களில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்பிரபு, மோகனா, அருள்சேசுராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், மணிமாறன், வளன்அரசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் நின்ற பெண் ஊழியர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை விட, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகள் அதிக அளவில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் பேசியதாவது:-
நமது 9 அம்ச கோரிக்கைக்காக வேலைநிறுத்தம் செய்யும்போது சம்பளம் கிடையாதாம். ஒரு மாத ஊதியத்தை பிடித்தம் செய்தால்கூட பயப்படமாட்டோம். கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்க மாட்டோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றாமல் மெத்தன போக்குடன் மிரட்டி கொண்டிருக்கிறது.
நாங்கள் எஸ்மா, டெஸ்மா என எல்லாவற்றையும் பார்த்தவர்கள். இந்த அரசுக்கு அஞ்சக்கூடியவர்கள் நாங்கள் இல்லை என்பதை அரசு உணர்ந்திருக்கும் என நம்புகிறோம். (ஏற்கனவே ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது). இன்று சாலை மறியல் நடக்காமல் தடுக்க வேண்டுமானால், ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகளை அழைத்து அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீலகண்டன் எஸ்மா, டெஸ்மா சட்டத்திற்கு அஞ்சமாட்டோம் என்று பேசியபோது பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.