அரியலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி-மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைக்கு வந்தது

அரியலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

Update: 2019-01-22 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து, திட்டத்தை விளக்கி பேசினார். அவர் பேசுகையில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரியலூர் மாவட்ட கருவூலத்தில் சுமார் 11 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 6 ஆயிரம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை இணையம் வாயிலாக எவ்வித கால நிபந்தனையுமின்றி கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். பட்டியல்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் பயனாளியின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக எளிதாக அறிந்துகொள்ளும் சூழல் உருவாக்கப்படுகிறது, என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், கருவூல அதிகாரி இளங்கோவன் மற்றும் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள், கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்