நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்: முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
மும்பை,
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டுப் மேற்கில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் முருகன் கோவில், மாகிம் முருகன் கோவில், மலாடு ஒர்லம் சுப்பிரமணியசுவாமி கோவில், டோம்பிவிலி முருகன் கோவில், நெருல் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.