பொங்கல் விடுமுறை முடிந்தது: வெளியூர் செல்வதற்கு நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது
பொங்கல் விடுமுறை முடிந்ததால், வெளியூர் செல்வதற்கு நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்,
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 12, 13-ந் தேதிகள் (சனி, ஞாயிறு) உள்பட 17-ந் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து இருந்தனர்.
பொங்கல் விடுமுறை முடிவடைந்து குமரி மாவட்ட மக்கள் பெரும்பாலானவர்கள் நேற்று வெளியூர் புறப்பட்டு சென்றனர். இதனால் நாகர் கோவில் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து கடந்த 17-ந் தேதி முதல் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் இல்லாமல் செல்ல முடியும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.அதாவது நாகர்கோவிலில் இருந்து சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு இன்று வரை 50 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.