வேட்டவலம் அருகே உயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்தவர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் நூதன போராட்டம்
விளைநிலம் வழியாக மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்தவர் தாக்கப்பட்டார். இந்த பிரச்சினையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்டவலம்,
வேட்டவலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்த ராணி என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் மின்கோபுரம் அமைப்பதற்காக இரும்பு கம்பிகளை புதைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த ராணி அங்கே பணியில் ஈடுபட்டவர்களிடம் யார் அனுமதியுடன் இரும்பு கம்பிகளை புதைத்து வைத்து உள்ளர்கள்? என்று கேட்டு, இரும்பு கம்பிகளை அகற்றுமாறு கூறினார். இதனை வடமாநில பணியாளர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த விவசாயி ராணியின் உறவினர் ரஜினி ஏழுமலை பணியாளர்களை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வடமாநில பணியாளர்கள் ரஜினி ஏழுமலையை திடீரென தாக்கினர்.
இது குறித்து தகவலறிந்த ராணியின் மகன் வினோபா, அவரது உறவினர் செந்தில்குமார் மற்றும் சுமார் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். ரஜினி ஏழுமலையை தாக்கிய வடமாநில பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அருகே கட்டுமானப் பணி மேற்கொண்டு வந்த உயர்மின் கோபுரம் மீது ஏறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடந்த இடத்துக்கு கீழ்பென்னத்தூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் நாராயணன், வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் பலராமன் மற்றும் பலர் விரைந்து வந்து உயர்மின் கோபுரங்கள் மீது ஏறியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஜினி ஏழுமலையை தாக்கிய வடமாநில இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தினர்.
அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படாதவாறு வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில் பயிர்களை அறுவடை செய்யும் வரை விளைநிலங்களில் மின் கோபுர பணி நடைபெறாது எனவும், ரஜினிஏழுமலையை தாக்கிய வடமாநில இளைஞர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து உயர்மின் கோபுரத்தை விட்டு இளைஞர்கள் இறங்கி வந்தனர்.