ஆரணி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் 7 பேர் மறுவாழ்வு பெற வாய்ப்பு
ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர்.
ஆரணி,
வேலூர் மாவட்டம் திமிரியை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 32) ஆரணியில் விசைத்தறி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். தினமும் வேலைக்கு வந்து விட்டு வாழைப்பந்தலுக்கு சென்று விடுவார்.
கடந்த 4 தினங்களுக்கு முன்பு இவரை பார்ப்பதற்காக காஞ்சீபுரத்தை சேர்ந்த நண்பர் குணசேகரன் என்பவர் ஆரணிக்கு வந்தார். வெங்கடேசனை அவர் வேலைபார்க்கும் நெசவுக்கூடத்திற்கு சென்று சந்தித்தார். பின்னர் குணசேகரனுடன் வெங்கடேசன் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
வந்தவாசி செல்லும் ரோட்டில் ஆரணி கண்ணகி நகர் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். இவர்களில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வெங்கடேசன் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஆபத்தான நிலையில் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது மூளை நேற்று செயல் இழந்தது. அதை தொடர்ந்து அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதனை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். வெங்கடேசன் தான் நமக்கு எதிர்காலம் என இருந்த நிலையில் அவனுக்கு இந்த கதி ஏற்பட்டுவிட்டதே என கதறினர். சற்று மனதை தேற்றிய அவர்கள் வெங்கடேசன் இறப்பதற்குள் அவனது உடல் பாகங்களையாவது தானம் செய்தால் அதன் மூலம் தானம் பெறுபவர்களிடம் நமது மகன் வாழ்வான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேசனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவர்கள் அறிவித்தனர். பின்னர் வெங்கடேசன் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது 2 கண்கள், இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் ஆகிய உறுப்புகளை டாக்டர்கள் தானமாக பெற்று பதப்படுத்தினர். இந்த உறுப்புகள் தேவைப்படும் 7 பேருக்கு பொருத்துவதன் மூலம் அவர்கள் மறுவாழ்வு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.