கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - தினேஷ் குண்டுராவ்
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதை நாங்கள் பகிரங்கப்படுத்தி உள்ளோம். எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொடர்பில் உள்ளனர். அனைவரும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வருவார்கள். என்ன நடந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அடுத்து என்ன நடக்கிறது என்று இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே கூறுகையில், “எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இதன் மூலம் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துவிடும்” என்றார்.