பழைய தேர்வு முறையை அமல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்
பழைய தேர்வு முறையை அமல்படுத்த கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் உதவி கலெக்டர் செழியனை சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து அமல்படுத்தி உள்ளது. இதனால் அந்த பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாதிப்படைகிறோம். முதல் பருவத்தேர்வில் தேர்ச்சி அடையாத பாடத்தை 2-வது பருவத்தேர்வில் எழுத முடியாது என்றும், 3, 5, 7-வது ஆகிய பருவத்தேர்வில் என ஆண்டுக்கு ஒருமுறை தான் எழுத முடியும் என்றும் கூறி இருக்கிறது.
அதிலும் ஒவ்வொரு பருவத்தேர்விலும் தோல்வியடைந்த பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே எழுத முடியும் என்றும் கூறி இருக்கிறது. இந்த புதிய தேர்வு நடைமுறையால் உடல்நிலை முடியாத, ஆப்சென்ட் மற்றும் தோல்வியடையும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் 4 ஆண்டிற்குள் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க முடியாத நிலையும் ஏற்படும். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய தேர்வு நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.