மோகனூர் அருகே ரூ.6½ கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மோகனூர் அருகே ரூ.6½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Update: 2019-01-18 23:30 GMT
மோகனூர்,

மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி வழியாக வள்ளிபுரம் வரை 9 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.6 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சந்திரசேகரன் எம்.எல்.ஏ., நாமக்கல் ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன், மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன், நகர செயலாளர் தங்கமுத்து, ஊராட்சி செயலாளர் பாலு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்