குப்பைகள் கொட்ட இடம் இல்லாததால் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் தஞ்சையில் தொடரும் அவலம்
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள கிடங்கில் குப்பை கொட்டுவதற்கு இடமில்லாததால் குப்பை ஏற்றி வந்த வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இது போன்று அடிக்கடி நடப்பதால் தஞ்சையில் அவலம் தொடர்கிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக தஞ்சை சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் 21 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
குப்பைகளை மேலும் கொட்டுவதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு முழுமையாக குப்பைகள் நிரம்பியுள்ளன. இதனால் வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுடன் வரும் வாகனங்கள், குப்பை கிடங்கிற்கு வெளியே அணிவகுத்து நிற்கக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழ் நிலையில் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகளை சமப்படுத்தி, அதற்கு மேல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
நேற்றுகாலை தஞ்சை மாநகராட்சி வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் டிராக்டர், லாரிகள், சரக்கு ஆட்டோக்களில் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. ஆனால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கிடங்கின் முன்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடந்ததால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டன. குப்பை கிடங்கின் நுழைவு கதவும் பூட்டப்பட்டது.
காலை உணவு கூட சாப்பிடாமல் நீண்டநேரமாக துப்புரவு பணியாளர்கள் காத்திருந்தனர். பொக்லின் எந்திரங்கள் மூலம் குப்பைகளை சமப்படுத்தும் பணியானது, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையால் ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வாகனங்கள் செல்லக்கூடிய பாதைகளில் தேங்கி கிடந்த குப்பைகள் கூட அகற்றப்படவில்லை. இதன்காரணமாக வாகனங்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாலைவரை வாகனங்கள் வரிசையாக காத்திருந்தன. தஞ்சையில் தொடரும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, தற்போது இங்கு அளவுக்கு அதிகமாக குப்பைகள் உள்ளன. இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசும். குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
அவ்வாறு தீ விபத்து ஏற்படும் போது அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்படும். அவ்வாறு ஏற்படும் புகை மூட்டம் ஜெபமாலைபுரம், செக்கடி, சீனிவாசபுரம், மேலவீதி, பழைய பஸ் நிலையம், தெற்கு அலங்கம், தெற்கு வீதி, வடக்கு வீதி, சிவகங்கை பூங்கா வரை பரவும். இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.
அதிகாரிகள் கூறும்போது, ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வராததால் கிடங்கின் முன்பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த குப்பைகளை அகற்றியவுடன் வாகனங்களில் உள்ள குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை 14 இடங்களில் கொட்டி, அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
குப்பை கிடங்கு முன்பு ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. குப்பைகளுடன் நின்ற வாகனங்களால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர். மேலும் மாநகராட்சி பகுதிகளில் பல இடங் களில் குப்பைகள் அகற்றப் படாத நிலை ஏற்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் குப்பைகள் அகற்றப்படும் பணியில் பெரிய அளவில் தேக்கம் ஏற்படும் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.