வருடாந்திர பராமரிப்பு பணிகள்: பாகூர், கிருமாம்பாக்கத்தில் 5 நாட்கள் மின்சார நிறுத்தம்

வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Update: 2019-01-18 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி பாகூர் துணை மின்நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வருகிற 22–ந் தேதி முதல் 5 நாட்கள் கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:–

வருகிற 22–ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கன்னியகோவில், கொரவெளிமேடு, பரிக்கல்பட்டு, பாகூர், சேலியமேடு, அரங்கனூர், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம், புதுநகர், உச்சிமேடு, மூர்த்திக்குப்பம், பின்னாச்சிக்குப்பம், ஆதிங்கப்பட்டு, இருளஞ்சந்தை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

23–ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தவளக்குப்பம், பூரணாங்குப்பம், அபிஷேகப்பாக்கம், நல்லவாடு, டி.என்.பாளையம், இடையார்பாளையம், நானமேடு, கோருக்கமேடு, புதுக்குப்பம், தேடுவார்நத்தம், பிள்ளையார்திட்டு, தானம்பாளையம், ஆண்டியார்பாளையம், பாகூர், சேலியமேடு, அரங்கனூர், பின்னாச்சிக்குப்பம், ஆதிங்கப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

24–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பன்னித்திட்டு, பிப்டிக் தொழிற்பேட்டை, கிருமாம்பாக்கம், ஆலடிமேடு, பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, நரம்பை, காட்டுக்குப்பம், மனப்பட்டு, மனப்பட்டு பேட், வார்க்கால் ஓடை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

25–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பன்னித்திட்டு, பிப்டிக் தொழிற்பேட்டை, கிருமாம்பாக்கம், ஆலடிமேடு, பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, நரம்பை, காட்டுக்குப்பம், கந்தன்பேட், மணப்பட்டு, வார்க்கால் ஓடை, கன்னியகோவில், கொரவெளிமேடு, பரிக்கல்பட்டு, பாகூர், இருளஞ்சந்தை, சேலியமேடு, அரங்கனூர், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம், புதுநகர், உச்சிமேடு, மூர்த்திக்குப்பம் மற்றும் அதனை சார்ந்த இடங்கள்.

28–ந் தேதி (திங்கள் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், பன்னித்திட்டு, பிள்ளையார்குப்பம், கந்தன்பேட், பிப்டிக் தொழிற்பேட்டை, ஆலடிமேடு, வள்ளுவர்மேடு, நரம்பை, தவளக்குப்பம், தானாம்பாளையம், டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், புதுக்குப்பம், பூரணாங்குப்பம், ஆண்டியார்பாளையம், கொருக்கமேடு மற்றும் அதனை சார்ந்த இடங்கள்.

மேற்கண்ட தகவலை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்