வேலூர் அருகே நடந்த மாடு விடும் திருவிழாவில் மோதிக்கொண்ட ‘வில்லன்’ காளை சாவு பூஜைகள் செய்து நல்லடக்கம்
வேலூர் அருகே மூஞ்சூர்பட்டு கிராமத்தில் நடந்த மாடு விடும் திருவிழாவில் பங்கேற்ற ‘வில்லன்’ காளையும், மற்றொரு காளையும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ‘வில்லன்’ காளை பலியானது. கிராமமக்கள் பூஜைகள் செய்து அடக்கம் செய்தனர்.
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் மாடுவிடும் திருவிழா நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. அந்த காளைகளை இளைஞர்கள் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர்.
இதில் ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரது காளையும் பங்கேற்றது. அந்த காளைக்கு அவர்கள் ‘வில்லன்’ காளை என பெயரிட்டு அழைத்து வந்தனர். விழாவில் அவிழ்த்து விடப்பட்ட ‘வில்லன்’ காளை பாதி தூரம் ஓடியபோது இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது நெருங்க முயன்ற இளைஞர்களை அந்த காளை ஒரே இடத்தில் நின்றவாறு சுற்றி முட்டுவதற்காக பாய்ந்தது.
‘வில்லன்’ காளை பாதியில் நின்றதை விழாக்குழுவினர் அறியாததால் அடுத்த காளையை அவிழ்த்து விட்டனர். அந்த காளை இளைஞர்களின் கூட்டத்தின் நடுவே ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது. அந்த காளையை ‘வில்லன்’ காளை திடீரென முட்ட முனைந்து வேகமெடுத்தது. ஆனால் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்த காளையின் வேகத்துக்கு ‘வில்லன்’ காளையால் ஈடு கொடுக்க முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் இரு காளைகளும் முட்டிக் கொண்டன. அதில் ‘வில்லன்’ காளை சரிந்து விழுந்தது. அதன் இடதுபுற கொம்பு உடைந்தது.
உடனடியாக அந்த காளைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் உடைந்த மாட்டின் கொம்பும் அதில் ஒட்டப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ‘வில்லன்’ காளை பரிதாபமாக உயிரிழந்தது. காளையின் இறப்பை அதை வளர்த்த குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். குடும்பத்தினர், அந்த கிராம மக்கள் ‘வில்லன்’ காளை படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தனர்.
இதையடுத்து ‘வில்லன்’ காளைக்கு மாலை அணிவித்து, வாசனை திரவியங்கள் தெளித்து பூஜை செய்தனர். அந்த கிராமமக்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினர். பலர் கடவுளாக நினைத்து வழிபட்டனர். காளை ஊர்வலமாக கொண்டு சென்று மாலையில் நல்லடக்கம் செய்தனர். ‘வில்லன்’ காளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.