அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது - தலைமை செயலாளர் பெயரை கூறி பலரிடம் பணம் பறித்தது அம்பலம்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமை செயலாளர் பெயரை கூறி பலரிடம் பணம் பறித்தது அம்பலமாகி உள்ளது.
அனுப்பர்பாளையம்,
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் ஊத்துக்குளி சாலை வாவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன்(வயது 52). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அறிமுகமான மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அருண் என்பவர், தனக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உதவியாளர் பழக்கம் என்றும், அவர் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இருக்கிறார். இதை நம்பிய ராஜேஸ்வரன், தன்னுடன் வேலை பார்க்கும் திருப்பூர் பி.என்.ரோடு அண்ணா நகரை சேர்ந்த சம்பத்குமார்(40), ஊத்துக்குளி விவேகானந்தர் வீதியை சேர்ந்த உதயக்குமார்(33) ஆகியோரிடம், தலைமை செயலாளரின் உதவியாளருக்கு நெருக்கமானவரின் தொடர்பு பற்றியும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறார்.
இதை நம்பிய சம்பத்குமார் தன்னுடைய மனைவி தமிழரசிக்கு அரசு வேலை கேட்டு ரூ.5 லட்சத்தை பல தவணைகளாக ராஜேஸ்வரனிடம் கொடுத்தார். உதயகுமாரும் தனக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ராஜேஸ்வரன் வங்கி கணக்கில் ரூ.8 லட்சம் செலுத்தி உள்ளார். இதற்கிடையே உதயகுமார், சம்பத்குமார் ஆகிய 2 பேரிடமும் தலைமை செயலாளர், அவரது உதவியாளர் என்று கூறி பலமுறை பேசி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் 2 பேரும் தங்களிடம் பேசியவர்கள் தலைமை செயலாளர், அவரது உதவியாளர் என்றும் தங்களுக்கு வேலை கிடைத்து விடும் என நம்பினர்.
இதற்கிடையே ராஜேஸ்வரனின் அக்காள் மகனான செங்கோட்டையை சேர்ந்த பழனிவேல், திண்டுக்கல்லை சேர்ந்த விஜயலட்சுமி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், இசக்கிதுரை ஆகியோர் அரசு வேலைக்காக ராஜேந்திரன் கூறியபடி வங்கி கணக்கு மூலமாக ரூ.24 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 6 பேரிடமும் தலைமை செயலாளர், அவரது உதவியாளர் என்று செல்போனில் பேசி உள்ளனர். அருணும் அவ்வப்போது செல்போனில் பேசி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேல், மகேந்திரன், இசக்கித்துரை ஆகியோரிடம் தலைமை செயலாளர் உதவியாளர் என்று கூறிய சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் செல்போனில் பேசும் போது, உங்கள் 3 பேருக்கும் பணி நியமன ஆணை தயாராக உள்ளது. நீங்கள் சென்னை வந்து அதை பெற்று கொள்ளலாம் என்றும், 3 பேரும் வரும்போது தலா ரூ.50 ஆயிரம் கொண்டு வருமாறும் கூறி உள்ளார். நீங்கள் சென்னை வந்த உடன் என்னுடைய உதவியாளர் அருண் உங்களை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பார் என்றும் கூறி உள்ளார்.
இதை நம்பி 3 பேரும் சென்னை சென்றனர். அவர்களை அருண் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார். அப்போது 3 பேரில் ஒருவர் ரூ.50 ஆயிரமும், மற்றொருவர் ரூ.25 ஆயிரமும் கொடுத்தனர். ஆனால் 3 பேரும் தலா ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பணி நியமன ஆணையை வழங்க முடியும் என்று கூறி 3 நாட்கள் அவர்களை அங்கேயே தங்க வைத்தனர். காலை மற்றும் மாலை நேரத்தில் அருண் அந்த விடுதிக்கு சென்று பணம் கேட்டதால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்து மோசடி செய்யும் கும்பலாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த 3 பேரும் அருணை போலீசில் பிடித்து கொடுக்க திட்டமிட்டனர். இந்த தகவலை திருப்பூரில் இருந்த சம்பத்குமார், ராஜேஸ்வரனுக்கு தெரிவித்தனர். இதையடுத்து சம்பத்குமார், ராஜேஸ்வரன் ஆகியோர் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் இருவரும் அந்த 3 பேர் தங்கி இருந்த விடுதியின் மேல் மாடியில் அறை எடுத்து தங்கி அருணை கண்காணித்தனர். மறுநாள் அருண் வந்தபோது அனைவரும் சேர்ந்து அருணை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்ற அருணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே உதயக்குமார், சம்பத்குமார் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தார். இதனால் பிடிபட்ட அருண், 15 வேலம்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அருண், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த போது கார்த்திகேயன் அவரிடம், தான் தலைமை செயலாளரின் உதவியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது. பிறகு அவர் அரசு வேலையை தேடுபவர்களை தன்னிடம் அறிமுகப்படுத்தினால் ஒரு தொகை தருவதாக கூறி உள்ளார். இதன் பின்னர் அருண் திருப்பூரில் ராஜேஸ்வரனை சந்தித்து பேசி இருக்கிறார். இதை நம்பிதான் ராஜேஸ்வரன் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சம்பத்குமார், உதயக்குமார், ராஜேஸ்வரனின் மருமகன் பழனிவேல், அவருடைய நண்பர்கள் மகேந்திரன், இசக்கிதுரை உள்பட 6 பேரிடம் இருந்து அரசு வேலைக்காக பல லட்சத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் தலைமை செயலாளரின் உதவியாளர் என்ற பெயரில் யாரோ ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 6 பேரிடம் பல லட்சத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீசார் அருணை கைது செய்தனர். இதேபோல் 6 பேரிடம் பணத்தை பெற்று கொடுப்பதற்கு உடந்தையாக இருந்ததாக ராஜேஸ்வரனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்று கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி சம்பவத்தில் பணம் கொடுத்தவர்களிடம் தான் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்று செல்போனில் பேசிய பெண் யார்? அவருடைய உதவியாளர் கார்த்திகேயன் என்று கூறி மோசடி செய்த நபர்? யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் பலரிடம் பலகோடி மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலைமை செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் பெயரில் பல லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.