திருப்பூர் மாவட்ட போலீஸ் துறையில் தனி நபர் விவரம் சரிபார்ப்பு இணையதள சேவை - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாவட்ட போலீஸ் துறையில் போலீஸ் தனி நபர் விவரம் சரிபார்ப்பு குறித்த புதிய இணையதள சேவையை போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தொடங்கி வைத்தார்.
திருப்பூர்,
தமிழக போலீஸ் துறை சார்பில் ‘போலீஸ் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற புதிய இணைய வழி சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகளை பெற விண்ணப்பிக்கலாம். இந்த சேவையை பயன்படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறை மூலம் இந்த கட்டணத்தை செலுத்தலாம். விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக போலீஸ் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்த நபர் ஏதாவது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இந்த சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் முன் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். இந்த சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பொதுமக்கள் தனியார் நிறுவனங்கள் போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்தும் அல்லது போலீஸ் சரிபார்ப்பு சேவையில் உள்ள சரிபார்ப்பு என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை சரி பார்த்துக்கொள்ளலாம். பி.வி.ஆர். எண்ணை பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சேவையில் ஏதாவது குறைகள் இருந்தால் அதுபற்றி போலீஸ் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் என்ற பகுதியை பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். இந்த பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை மாநகர துணை கமிஷனர் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தாலும் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது.
மேலும், போலீஸ் துறைக்கு தவறான விவரங்களை அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் மற்றும் அலங்கியம் போலீஸ் நிலையங்களில் போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை முதன் முதலில் அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தெரிவித்துள்ளார்.