கர்நாடகத்தை சேர்ந்த 15 மீனவர்களை ஈரான் விடுவித்தது கார்வார் கலெக்டர் தகவல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைதான கர்நாடகத்தை சேர்ந்த 15 மீனவர்களை ஈரான் நாடு விடுவித்ததாக கார்வார் மாவட்ட கலெக்டர் கூறினார்.

Update: 2019-01-09 22:10 GMT
பெங்களூரு,

கார்வார் மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி தவறுதலாக ஈரான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்தனர். இதையடுத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை ஈரான் நாட்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்நாடக மீனவர்களை மீட்க உதவுமாறு கோரி வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதினார். அதன் பேரில் ஈரான் அரசுடன் இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் பேசினார்.

மீனவர்கள் விடுவிப்பு

இந்த நிைலயில் ஈரான் நாடு, கர்நாடக மீனவர்கள் 15 பேரை விடுவித்துள்ளதாக கார்வார் மாவட்ட கலெக்டர் நகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஈரான் நாடு கைது செய்த கர்நாடக மீனவர்கள் 15 பேரை விடுவித்துள்ளது. அவர்கள் படகு வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

மீட்பதில் காலதாமதம்

அதன் பிறகு அவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப கர்நாடகத்திற்கு திரும்புவார்கள். துபாய் மீனவர் ஒருவர், ஈரான் நாட்டு பிடியில் இருந்து தப்பி சென்றுவிட்டார். அதனால் கர்நாடக மீனவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு நகுல் கூறினார்.

இந்த நிலையில் மீனவர்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்து மாநில வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்