பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க நீண்ட வரிசையில் இரவிலும் காத்திருந்த பொதுமக்கள்

கீரமங்கலம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக இரவிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

Update: 2019-01-09 23:00 GMT
கீரமங்கலம்,

தமிழர்களின் பண்டிகை யான பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பச்சரிசி, சர்க் கரை உள்ளிட்ட பொருட் களுடன் 2 அடி கரும்பு மற்றும் ரூ.ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மதியம் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு உள் ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பற்றிய தகவல் வெளியான நிலையில், உடனே பொங்கல் பரிசு வாங்கவில்லை என்றால் அடுத்த நாள் போகலாம் என்று நினைத்த மக்கள் திடீரென மதியத்திற்கு பிறகு அனைத்து ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கி னார்கள். இரவு நேரத்திலும் கூட்டம் அதிக மாக நீண்ட வரிசையில் காத்திருந்ததால் கீரமங்கலம் பகுதியில் உடனடியாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

கீரமங்கலம் பகுதியில் கீர மங்கலம் ரேஷன் கடை, சந் தைப்பேட்டை, செரியலூர் ஜெமின், பனங்குளம் உள் ளிட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதில் சில இடங்களில் ஒரு அடி நீள முள்ள கரும்புகள் வழங்கப் பட்டது. ஆனால் செரியலூர் ஜெமின், பனங்குளம் ரேஷன் கடைகளில் கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசு வழங்கப் பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு நாளும் கரும்பு வந்த பிறகு பொங்கல் பரிசு வழங்க காத்திருந்த நேரத்தில் நீதிமன்ற உத்தரவை பார்த்த மக்கள் உடனே ஒவ்வொரு ரேஷன் கடையில் குவிந்துவிட்டதால் கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கரும்பு வந்த பிறகு வழங்கப்படும் என்றனர்.

மேலும் ரேஷன் கடைகளில் பணம் பற்றாக்குறை ஏற்பட்ட தால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

கீரனூர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்கள் நீண்ட வரிசை யில் நின்று வாங்கி சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ரூ.ஆயிரம் வழங்க தடை விதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ரேஷன் கடை களில் பொருட்கள் வாங்க குவிந்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வரிசையாக நின்று வாங்கி செல்லும்படி ஒழுங்குப்படுத்தினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்