வானவில்: மெத்தையை சுத்தம் செய்யும் ரோபோ

மெத்தை, தலையணையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இல்லையெனில் பெட் பக் எனும் சிறிய பூச்சி, பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகளால் உடலில் அலர்ஜி, தடிப்பு போன்றவை ஏற்படும்.

Update: 2019-01-09 09:09 GMT
இவற்றைத் தடுக்க சிறிய அளவிலான ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. வடிவில் சிறியதாகவும், நுண் கிருமிகளை அழிப்பதற்கெனவும் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ இதுதான். இதில் 18 சென்சார்கள் உள்ளன. இது புற ஊதாக் கதிர் விளக்கு மூலம் படுக்கையில் உள்ள நுண் கிருமிகளை அழித்துவிடும். இதை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொண்டு ஓட்டலில் தங்குபவர்கள், மெத்தை, தலையணையை பயன்படுத்தும் முன்பு இந்த ரோபோவை சிறிது நேரம் மெத்தை மீது ஓடச் செய்தால் மெத்தையில் உள்ள நுண் கிருமிகளை அழித்துவிடுமாம்.

கட்டிலின் முனை வரை சென்று கீழே விழாமல் மீண்டும் இது சுற்றி நான்கு புறமும் ஓடி சுத்தம் செய்துவிடும். 220 கிராம் எடை கொண்ட இந்த குட்டி ரோபோ 3 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது. அதற்கேற்ப இதில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் இதிலிருந்து உங்கள் ஸ்மார்ட் போனைக் கூட சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் எடை 220 கிராம் மட்டுமே.

இதை கையில் மாட்டிக் கொண்டு குழந்தைகளின் பொம்மைகளையும் சுத்தம் செய்யலாம். புற ஊதாக் கதிர் மூலம் சுத்தம் செய்ய விரும்பும் எந்த பொருளையும் இதன் மூலம் சுத்தம் செய்யலாம். இதன் மூலம் கார் சீட்களையும் சுத்தம் செய்யலாம். விரைவிலேயே இது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை 259 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்