வானவில்: உடலின் உள்ளே போடப்படும் பேண்ட் எயிட்

சில நேரங்களில் விபத்துகளின் போது உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். இது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். ராணுவ வீரர்கள் குண்டுவெடிப்பில் சிக்கும்போது இவ்வித பாதிப்பை சந்திப்பது உண்டு.

Update: 2019-01-09 07:33 GMT
இதற்கென தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ஒரு பேண்ட் எயிட்டை கண்டுபிடித்துள்ளனர். இது உடலின் வெளியே ஓட்டும் சாதாரண பிளாஸ்திரி போல் அல்லாமல் உடலின் உள்ளே இருக்கும் காயத்திற்கு போடப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பேக்கரிகளில் உபயோகிக்கும் ‘கப்பா கராகினான்’ என்கிற ஒரு பொருளை வேதி பொருட்களுடன் கலந்து ஒரு வித பசை ஜெல்லை தயாரித்துள்ளனர். இந்த ஜெல்லை ஊசி மூலம் அடிபட்ட இடத்தில் செலுத்துகின்றனர். ரத்தத்தில் இருக்கும் புரதங்கள் மற்றும் ரத்தத்தட்டுகளுடன் இணைந்து காயத்தின் உட்புறம் பேண்ட் எயிட் போல கடினமாகி ஒட்டிக் கொண்டு ரத்தக்கசிவை உடனடியாக நிறுத்துகிறது இந்த ஜெல். இந்த பேண்ட் எயிட்டில் இருக்கும் நானோ மருந்து பொருட்கள் விரைவாக காயத்தையும் குணமாக்குகின்றது.

உயிர் காக்கும் பொக்கிஷம் என்று இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்