வானவில்: இனிய உறக்கத்துக்கு வழிவகுக்கும் பெட் ஜெட்

தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் மிகவும் அவசியம். குளிர்காலத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமே என்று எல்லோருக்குமே தோன்றும். குளிர்காலமோ அல்லது வெயில் காலமோ சீரான தூக்கத்துக்கு வழி வகுக்கிறது பெட்ஜெட்.

Update: 2019-01-09 07:02 GMT
இந்த சாதனம் நாசாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரால் வடிவமைக்கப்பட்டது.

அதாவது வெயில் காலத்தில் குளிர்ச்சியான காற்றும், குளிர் காலத்தில் கதகதப்பான வெப்பத்தையும் இரவு போர்வையில் நிலவச் செய்யும். எந்த வகையான படுக்கை மெத்தையிலும் இதை பயன்படுத்த முடியும். இது பயோரிதம் டெம்பரேச்சர் தொழில்நுட்பம், அதாவது அறையில் நிலவும் தட்ப வெப்ப நிலை மற்றும் படுக்கையில் உறங்குபவரின் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அறையின் வெப்ப நிலைக்கேற்ப சூழலை மாற்றக் கூடியது. காலையில் குறித்த நேரத்தில் எழுந்திருக்க நினைத்தால் இதில் அலாரமும் செட் செய்யலாம். கடுமையான வேலைப்பளு காரணமாக இதமான வெப்ப காற்று தேவைப்பட்டால் பெட்ஜெட்டின் மூலம் சூடான காற்று வீச வைத்து உடல் வலியை குறைத்துக்கொள்ளலாம்.

குளிரில் கால் மரத்துப் போவது, விரல்களை அசைக்க முடியாமல் போவது போன்ற பிரச்சினைகள் இருக்காது. இதில் உள்ள மோட்டார் குளிர் மற்றும் வெப்பமான காற்றை அனுப்பும். வயர்லெஸ் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இதை செயல்படுத்தலாம்.

நிம்மதியாக உறங்க விரும்புவோரின் தேர்வாக இது இருந்தாலும், விலை சற்று அதிகம். இதன் விலை ரூ. 58,471.

மேலும் செய்திகள்