வானவில்: விரைவாக ஸ்கேன் செய்யும் நவீன இயந்திரம்

நமது ஆவணங்கள் அல்லது சான்றிதழ்கள் போன்றவற்றை ஸ்கேன் செய்ய பல செயலிகள் வந்துவிட்டாலும் சில நேரங்களில் அவை தெளிவாக பதிவதில்லை. ஆனால் இந்த சி. இசட். யூ. ஆர். ( CZUR ) ஸ்கேனர் கருவியில் அப்படி எந்த வித குறைபாடும் இல்லை.

Update: 2019-01-09 07:02 GMT
ஒரு முழு புத்தகத்தையே இதில் ஸ்கேன் செய்யலாம். இக்கருவியின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் தெளிவான பிம்பங்களை தருகிறது. வழுவழுப்பான பக்கங்களை கூட இதனைக் கொண்டு ஸ்கேன் செய்யலாம். மேலே இருக்கும் கேமராவின் கீழ்புறம் நமது புத்தகத்தையோ ஆவணத்தையோ வைத்து ஸ்கேன் செய்யலாம். வளைந்த பக்கமாக இருந்தாலும் அதை நேராக்கி, நமது விரல்களை பிரதிகளில் தெரியாமல் ஸ்கேன் செய்கிறது. இதனுள்ளே 32 பிட் அளவுள்ள சி.பி.யூ. உள்ளது. எண்பது பக்கங்களை ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்கிறது.

இது சாதாரண ஸ்கேனர்களை காட்டிலும் பத்து மடங்கு அதிகமான வேகம் கொண்டதாகும். அது மட்டுமின்றி 187 மொழிகளை கண்டறியும் திறன் பெற்றது. சில நிமிடங்களில் பக்கங்களை நமது விருப்பத்திற்கேற்ப ஒரு பி.டி.எப்.பாக மாற்றி விடுகிறது. A 3 அளவுள்ள பேப்பர்களைக் கூட ஸ்கேன் செய்யலாம். இதன் விலை 429 அமெரிக்க டாலர்கள்.

மேலும் செய்திகள்