வானவில்: முதுகை பாதுகாக்கும் நாற்காலி

இப்போதெல்லாம் முதுகு வலி அல்லது இடுப்பு வலி ஏற்படுவது அதிகமாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியக் காரணமாக இருப்பது நாம் அதிக நேரம் அமர்ந்திருப்பதும், தவறான வடிவத்தில் உடலை வளைத்து உட்காருவதும் தான் என்கின்றனர்.;

Update: 2019-01-09 06:25 GMT
மென்பொருள் பொறியாளர்களில் பலருக்கும் ‘டிஸ்க்’ பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் இதுவே காரணம். சுவிஸ் நாட்டை சேர்ந்த நோனி நிறுவனம் ஒன்று அருமையான கண்டுபிடிப்பை கொண்டு வந்துள்ளது.

இடுப்பிலிருந்து கால் வரை அணிந்து கொள்ளும் மெட்டல் பெல்ட் போல் தோன்றும் இந்த நாற்காலி போன்ற அமைப்பு நாம் எந்த நிலையில் கால்களை வைத்து அமர்ந்தாலும் நமது முதுகுத் தண்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

கால்களை மடக்கி, நீட்டி, குனிந்து என்று நாம் என்ன செய்தாலும் நம் உடலோடு ஒத்துழைத்து அழகாக மடங்கி விரிந்து கொள்கிறது. 130 கிலோ வரை எடை தாங்கக் கூடியது இது.

பார்ப்பதற்கு அவ்வளவு அலங்காரமாக இல்லை என்றாலும் இதை அணிந்து கொள்ளும் போது அதன் சவுகரியத்தை அனுபவித்தால் தான் புரியும் என்கின்றனர். விபத்தில் தண்டுவட பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும் இது மிகவும் உதவும் என்றும் கூறுகின்றனர் நோனி நிறுவனத்தார்.

மேலும் செய்திகள்