ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகை பறித்த முக்கிய குற்றவாளி கைது; தங்க கட்டி பறிமுதல்
ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகை பறித்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 72), ஓய்வுபெற்ற ஆசிரியர். கடந்த 3-ந்தேதி காரைக்கால் நகர் பகுதியான ஜுபைதா நகரில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம ஆசாமிகள் அவரது கழுத்தில் கத்தியை வைத்து தங்க சங்கிலி, மோதிரம், கை செயின், தங்கத்தால் ஆன கைக்கடிகாரம் மற்றும் வைரக்கல் பதித்த நகை ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காரைக்கால்மேட்டை சேர்ந்த தினேஷ் (25), அவரது நண்பர்கள் புதுச்சேரியை சேர்ந்த பிரதீப் (31), மர்லின்( 31), செல்வா (23), சுந்தர் (23), அரவிந்த் (23) ஆகிய 5 பேருடன் சேர்ந்து ராமநாதன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ், பிரதீப், மர்லின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தங்கம், வைர நகைகள், 2 செல்போன்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களின் கூட்டாளியான செல்வா, சுந்தர், அரவிந்த் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான அரவிந்தை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க கட்டி, ரூ. 50 ஆயிரம் மற்றும் பேனா கத்தி, கையுறை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அரவிந்த் புதுவையில் உள்ள ஒரு நகைக்கடையில் 15 பவுன் நகைகளை கொடுத்து, அதை தங்க கட்டியாக மாற்றியுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய செல்வா, சுந்தர் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் பாராட்டினார்.