பெங்களூருவில், தேவேகவுடா தலைமையில் நடந்தது: ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு

பெங்களூருவில், தேவே கவுடா தலைமையில் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-01-08 22:30 GMT
பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, காங்கிரஸ் கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு காலியாக உள்ள 2 மந்திரி பதவிகளை நிரப்பும் வகையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவேகவுடா கூறினார்.

அதிக தொகுதிகளில் வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதிகமாக பாடுபட வேண்டும் என்று தேவேகவுடா அறிவுறுத்தினார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தியிடம் பேசி 12 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றும், மைசூரு மண்டலத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்க வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் செய்திகள்