கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் தோல்வி பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி

கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் தோல்வி அடைந்திருப்பதாக பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.

Update: 2019-01-08 22:15 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முழு அடைப்பு தோல்வி

இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் கர்நாடகத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடிக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

மராட்டியம், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் இட ஒதுக்கீடு கேட்டு சில சாதி அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன் அடிப்படையில் உயர்சாதி சமுதாயங்களில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மோடி முடிவு எடுத்துள்ளார்.

நியாயம் கிடைத்துள்ளது

இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் இதை வரவேற்க வேண்டும். ஆனால் அவர்கள் மோடியின் முடிவை எதிர்க்கிறார்கள். இது சரியல்ல. அனைத்து பிரிவு ஏழைகளுக்கும் நியாயம் கிடைத்துள்ளது. இது அம்பேத்கரின் கனவு ஆகும். அவரது கனவை மோடி நிறைவேற்றியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதனால் பெட்ரோலிய பொருட்களின் விலையும் குறைந்து வருகிறது. ஆனால் அந்த பயன் மக்களுக்கு கிடைப்பதை தடுக்கும் பொருட்டு கர்நாடக அரசு, அவற்றின் மீதான வரியை உயர்த்திவிட்டது.

சமையல் செய்யலாம்

சமையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. காங்கிரஸ் மகளிர் அணியினர் டவுன் ஹால் முன்பு விறகு வைத்து சமையல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கியாஸ் சிலிண்டர் மூலமே அவர்கள் சமையல் செய்யலாம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

மேலும் செய்திகள்