‘அம்மா’ இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் 18-ந்தேதி கடைசி நாள்
நெல்லை மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
2018-19-ம் ஆண்டு உழைக்கும் பெண்களுக்கு, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல மொபட் அல்லது ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு (25 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்கள்) மட்டும் மானியமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.
இதையொட்டி அம்மா இருசக்கர வாகனம் 50 சதவீதம் மானியத்தில் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம், யூனியன் அலுவலகங்கள், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் ஆணையாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட யூனியன், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயது வரை இருப்பதற்கான வயது வரம்பு சான்று, இருப்பிட சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, மின்நுகர்வோர் அட்டை, கியாஸ் இணைப்பு அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வருமான சான்று, நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மேலும் முன்னுரிமை சான்றாக தொலை தூர இடங்களில் வேலை பார்க்கும் பெண்கள், மலைவாழ் பெண்கள், ஏழை மகளிரை குடும்ப தலைவியாக கொண்ட மகளிர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி, 35 வயதுக்கு மேற்பட்ட முதிர்கன்னி, ஆதிதிராவிடர் மற்றும் திருநங்கைகள் என்றால் அதற்கான சான்று, ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்கள் சாதிச்சான்றிதழ் மற்றும் இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஓட்டுனர் உரிமம் மற்றும் வயது வரம்பு சான்று கண்டிப்பாக இணைத்திட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு வழங்கும் மானியத்தொகை போக மீதி பணத்தை செலுத்த தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு விரைவு தபால், பதிவு தபால் மூலம் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பலாம். அரசு வழிகாட்டு நெறிமுறையில் நெல்லை மாவட்டத்தில் மொத்த பெண்கள் விகித அடிப்படையில் நகர்ப்புறத்துக்கு 2,198 ஸ்கூட்டர், ஊரக பகுதிக்கு 2,257 ஸ்கூட்டர் என மொத்தம் 4,455 ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.