வில்லிவாக்கத்தில் கட்டிட மேஸ்திரி காரில் கடத்தல் கள்ளக்காதலி உள்பட 6 பேர் கைது
வில்லிவாக்கத்தில் கட்டிட மேஸ்திரியை காரில் கடத்தியதாக அவரது கள்ளக்காதலி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப். காலனியில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியில் மேற்குவங்காளத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (வயது 45) என்பவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மேற்குவங்காளத்தில் உள்ளனர். இவரது கட்டுப்பாட்டில் 10 கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவரது மேற்பார்வையில், முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியிலும் ஒரு கட்டுமானப்பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ஐ.சி.எப். காலனிக்கு அபிஜித் தாஸ், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வருவது வழக்கம். அதே பகுதியில் தொழிலாளர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் ஒடிசாவை சேர்ந்த ஜோஸ்னா (32) என்ற பெண் ஈடுபட்டு வந்தார். இவருக்கும், கட்டிட மேஸ்திரி அபிஜித் தாஸ் இடையே கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வரும் அபிஜித் தாஸ் இரவில் இவரது வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.
இதேபோன்று கடந்த சனிக்கிழமை அன்று தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வந்த கட்டிட மேஸ்திரி இரவில், கள்ளக்காதலி ஜோஸ்னாவுடன் தங்கினார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் வீட்டின் கதவை தட்டினர்.
கதவை திறந்து பார்த்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு நின்றிருந்தது. அதில் ஒருவர், எனது மனைவியோடு நீ எப்படி இரவில் தங்கலாம்? என்று கூறி அடித்து உதைத்து அபிஜித் தாசை காரில் கடத்தி சென்று விட்டார்.
இதுகுறித்து கட்டுமான நிறுவன மேலாளர் புருஷோத்தமன் ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின்பேரில் ஜோஸ்னாவின் செல்போனை சோதனை செய்தபோது, சம்பவம் நடந்தபோது அவர் சிலருக்கு போன் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கள்ளக்காதலி ஜோஸ்னாவிடம் தீவிரமாக விசாரித்தபோது, அவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தனது மற்றொரு கள்ளக்காதலன் ஒடிசாவை சேர்ந்த திருலோச்சம் (28) மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்டிட மேஸ்திரியை கடத்தியது தெரியவந்தது.
மேலும், கடத்தல் கும்பல் கட்டிட மேஸ்திரியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் எடுத்ததும், அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்ததும் தெரியவந்தது. பின்னர், விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கட்டிட மேஸ்திரி பத்திரமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து கட்டிட மேஸ்திரியின் கள்ளக்காதலி ஜோஸ்னா, அவரது மற்றொரு கள்ளக்காதலன் திருலோச்சம், அவரது கூட்டாளிகள் ஜமாலுதீன், ராஜேஷ்குமார், சதீஷ்குமார் மற்றும் கார் டிரைவர் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.