பிளஸ்-1 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்முடி தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில், மாணவர் களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்க சிறப்பு மையம் அமைக்க வேண்டும். பிளஸ்-1 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படியே இருந்த தேர்வு முறையே பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள அடிப்படை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிளஸ்-1 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், “எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 என 3 வகுப்புகளுக்கும் தொடர்ந்து பொதுத்தேர்வு முறை உள்ளது. இதனால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பிளஸ்-1 வகுப்பில் தற்போது மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
இதற்கு பொதுத்தேர்வு நடைமுறை தான் காரணம். எனவே, பிளஸ்-1 பொதுத்தேர்வை வருகிற கல்வி ஆண்டு முதல் ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றனர். கூட்டத்தில் மாநில பொது செயலாளர் ரமேஷ், திருச்சி மாவட்ட தலைவர் சின்னப்பன், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.