150 ஆண்டுகள் பழமையான பாம்பன் துறைமுக அலுவலக கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

150 ஆண்டுகள் பழமையான பாம்பன் துறைமுக அலுவலக கட்டிடம் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-01-06 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பனில் துறைமுக அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. புயல் காலங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக துறைமுக அலுவலகத்தில் புயல் கூண்டுகளும் துறைமுக அதிகாரிகளால் ஏற்றப்படும். மேலும் தூக்குப் பாலத்தை கடந்து செல்ல வரும் அனைத்து கப்பல்களுமே துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு தான் கடந்து செல்ல முடியும். அது போல் பாம்பனில் துறைமுமுக அலுவலகம் செயல்படடு வரும் கட்டிடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாம்பனில் பிரிட்டிஷ்காரர்களால் கால்வாய் தோண்டப்பட்டு அதன் வழியாக பெரிய படகுகள், தோணி, சிறிய கப்பல்கள் சென்று வந்தன. அப்போது பிரிட்டிஷ்காரர்களால் துறைமுக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடமானது சுண்ணாம்பு கற்கள், பவளப்பாறை கற்களால் கட்டப்பட்டது.

சுமார் 150 ஆண்டுகள் ஆனதுடன் மிகவும் பழமையான கட்டிடமாக இருந்ததால் அதன் அருகிலேயே துறைமுக கடல்சார் வாரியம் மூலம் புதிய கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடமும் கட்டி முடிக்கப் பட்டது. புதிய கட்டிடம் சில நாட்களுக்கு முன்பு பயன் பாட்டுக்கு வந்ததுடன் பழைய கட்டிடத்தில் இருந்த புயல் கூண்டுகள் மற்றம் அலுவலகம் அனைத்துமே புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டன.

இந்நிலையில்அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 3 நாட்கக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதற்காக ஜே.சி.பி.எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்